திருச்சி: பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி: பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதி உள்ளது. இங்கு உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (வயது 30), பிரபு (வயது 32) ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது தொழிலாளர்கள் இருவரையும் விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com