

திருச்சி,
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 25 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதிகாரிகள் 25 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.