

சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி - பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலின் சேவையை நீட்டிப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூரு சென்றடையும் திருச்சி - எஸ்.எம்.வி.டி பெங்களூரு அதிவேக சிறப்பு ரெயில் சேவை (வண்டி எண் 06007) ஜூன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளுக்கு (4 சேவைகள்) நீட்டிக்கப்படும்.
அதேபோல், செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்தடையும் எஸ்.எம்.வி.டி பெங்களூரு - திருச்சி அதிவேக சிறப்பு ரெயில் சேவை (வண்டி எண் 06008) ஜூன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளுக்கு (4 சேவைகள்) நீட்டிக்கப்படும்.
மேற்கண்ட சிறப்பு ரெயில் சேவைகளுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.