திருச்சி மத்திய சிறை கைதி திடீர் சாவு

திருச்சி மத்திய சிறை கைதி திடீரென இறந்தார்.
திருச்சி மத்திய சிறை கைதி திடீர் சாவு
Published on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அழகுமலையான். இவருடைய மகன் சதீஷ் (வயது 44). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2016-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறை அதிகாரிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சிறைத்துறை அதிகாரி அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com