திருச்சி-சார்லபள்ளி எக்ஸ்பிரஸ் வாராந்திர ரெயிலாக மாற்றம்

திருச்சி-சார்லபள்ளி எக்ஸ்பிரஸ் வாராந்திர ரெயிலாக மாற்றம் செய்து தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரெயில்
Published on

திருச்சி,

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளி-திருச்சி இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 07615/07616) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் பயணிகளின் வசதிக்காக வாராந்திர எக்ஸ்பிரஸ் (வழக்கமான ரெயில்) ரெயிலாக மாற்றம் செய்து தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்

அதன்படி, சார்லபள்ளியில் இருந்து வருகிற ஜூலை 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (17077), மறுநாள் மாலை 6.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து வருகிற ஜூலை 8-ந்தேதி (புதன்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (17078), மறுநாள் இரவு 9.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது என்று திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com