திருச்சி மாநாடு: அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை..!

திருச்சியில் அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநாடு: அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை..!
Published on

திருச்சி,

ஓ.பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை காட்ட ஏற்கனவே திட்டமிட்டபடி திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் தனது ஆதரவாளர்களின் மாநாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) முப்பெரும் விழா என்ற பெயரில் அந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாடு நடைபெறும் இடத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்தி விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். அத்துடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைக்கிறார் என்றும் கட்-அவுட் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு மாநாட்டு மேடை அதிமுக தலைமை அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை என மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்களுக்கு நடுவே ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் உள்ளது. மேலும் இரட்டை இலை சின்னமும் மேடையில் மேலே உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com