

திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வந்தது.
இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை திருச்சியில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமான சேவைகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வந்த பிறகு மீண்டும் இயக்கப்படும் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.