திருச்சி கிழக்கு தொகுதி: விஜய் ராஜினாமா

சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விஜய் ராஜினாமா செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி: விஜய் ராஜினாமா
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக இன்று காலை விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் விஜய் ஈடுபட்டார். இந்தநிலையில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். திருச்சி கிழக்கு ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றிருந்தார் . முதல்-அமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com