

கோவை,
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கரூர் அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய திருச்சி-பாலக்காடு விரைவு ரெயில் (எண் 16843) கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயிலானது, அன்றைய தினம் திருச்சி -கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.