திருச்சி- பாலக்காடு ரெயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்

ஈரோடு வழியாக செல்லும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
திருச்சி- பாலக்காடு ரெயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்
Published on: 

ஈரோடு,

ஈரோடு- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடைபட்ட பகுதியில் பாலம் பராமரிப்பு பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு வழியாக செல்லும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

அதன்படி இந்த ரெயில் இருகூரில் இருந்து போத்தனூர் வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் சிங்காநல்லூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இந்த ரெயில் செல்லாது என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com