திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்; 25 வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் பங்கேற்பு


திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்; 25 வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் பங்கேற்பு
x

திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் கலந்து கொண்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

திருச்சி,

தமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், திருச்சியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

இதில் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வளத்தின் அடையாளம் வெளிப்படும் வகையில், பாரம்பரிய முறையில் புது மண்பானையில் பொங்கலிட்டனர். இந்த கொண்டாட்டத்தில் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாவாசிகள் 25 பேர் கலந்து கொண்டு அவர்களும் பொங்கல் வைத்து சிறப்பித்தனர்.

அப்போது அவர்கள், தமிழக பாரம்பரிய நடைமுறைகளை கண்டு களித்ததுடன், அதிகாரிகளிடம் அதுபற்றி கேட்டு தெரிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் கலந்து கொண்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

1 More update

Next Story