திருச்சி சூர்யா ஜாமீன் மனு - காவல்துறை பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக திருச்சி சூர்யா கூறியுள்ளார்.
திருச்சி சூர்யா ஜாமீன் மனு - காவல்துறை பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

பா.ஜனதா மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர் குறித்து பா.ஜனதா முன்னாள் நிர்வாகியும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகனுமான திருச்சி சூர்யா, யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து, திருச்சி சூர்யாவுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அலிஷா அப்துல்லா புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார், திருச்சி சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சூர்யா மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “யூடியூப் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே பதிலளித்தேன். அப்பாவியான என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்'' என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், மனு குறித்து போலீஸ் தரப்பில் வருகிற 10-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com