திருச்சி: பாலம் இல்லாததால் வாய்க்காலில் இறங்கி சடலத்தைத் தூக்கிச் சென்ற அவலம்

தட்டான்குளம் வாய்க்காலில் பாலம் இல்லாததால் இதுபோன்ற துயர சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சி: பாலம் இல்லாததால் வாய்க்காலில் இறங்கி சடலத்தைத் தூக்கிச் சென்ற அவலம்
வாய்க்கால்
Published on: 

திருச்சி,

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள தட்டான்குளம் வாய்க்காலில் பாலம் இல்லாததால், சடலத்தை அப்பகுதி பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் இறந்த பிறகும் துயரம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாலம் இல்லாததால் ஏற்பட்ட அவலம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தட்டான்குளம் வாய்க்காலைக் கடந்து செல்வதற்கு முறையான பாலம் அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்குக் கொண்டு செல்வதில் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

வாய்க்காலில் இறங்கி சென்ற பொதுமக்கள்

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். வாய்க்காலைக் கடக்க வேறு வழியில்லாததால், உறவினர்களும் பொதுமக்களும் தண்ணீர் ஓடும் தட்டான்குளம் வாய்க்காலுக்குள் இறங்கினர். மிகுந்த சிரமத்திற்கு இடையே ராஜசேகரனின் சடலத்தை தோளில் சுமந்தபடி வாய்க்காலைக் கடந்து சென்ற காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

தட்டான்குளம் வாய்க்காலில் பாலம் இல்லாததால் இதுபோன்ற துயர சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இப்பகுதியில் புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X