திருச்சி: ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (32 வயது). இவருக்கு திருமணமாகி ஜனனி (30 வயது) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதில் அவர் பல லட்சத்தை இழந்ததாக தெரிகிறது.

இதனால் நெருக்கடிக்கு ஆளான கிஷோர் குமார் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கிஷோர் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஜனனி கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com