திருச்சி - காரைக்கால் ரெயில் நாளை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சாவூர் - திருச்சி பாசஞ்சர் ரெயில் 13-ந்தேதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.
திருச்சி - காரைக்கால் ரெயில் நாளை ரத்து
Published on

திருச்சி,

திருச்சி கோட்டத்தின் பொன்மலை ஜங்ஷனில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், திருச்சியில் இருந்து செல்லும் சில ரெயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

திருச்சி காரைக்கால் டெமு ரெயில்

”திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (எண் 76820) நாளையும், திருச்சி -திருப்பாதிரிப்புலியூர் டெமு ரெயில் (எண் 76812) நாளை மற்றும் 12-ந் தேதியும், காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண் 76819) நாளையும், தஞ்சாவூர் திருச்சி பாசஞ்சர் ரெயில் (எண் 56819) வருகிற 13-ந்தேதியும், காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண் 76825) வருகிற 15-ந்தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்

இதேபோல், செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16848) வருகிற 15-ந்தேதி திருச்சி சந்திப்பை தவிர்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com