டாஸ்மாக்கில் மும்மொழி அறிவிப்பு பலகை? - தமிழக அரசு விளக்கம்

பழைய புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் மும்மொழி அறிவிப்பு பலகை? - தமிழக அரசு விளக்கம்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடைக்கான அறிவிப்பு பலகை மும்மொழியில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அது பழைய புகைப்படம் என்றும், தற்போது அந்த இடத்தில் எந்த அறிவிப்பு பலகையும் இல்லை என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2024-ம் ஆண்டு புதியதாக மதுக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மும்மொழியில் அறிவிப்பு பலகை, மதுக்கூட உரிமதாரரால் வைக்கப்பட்டது. இதுகுறித்து தெரிய வந்ததும் நடவடிக்கை மேற்கொண்டு பலகை (போர்டு) அகற்றப்பட்டது. தற்போது எந்த போர்டும் அவ்விடத்தில் இல்லை. பழைய புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com