சென்னையில் நாளை விஜய் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்

தி.நகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை விஜய் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் தவெக 23 4 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. தவெக தலைவர் விஜய் சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது இந்தநிலையில்,

சென்னையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் என தகவல் வெளியாகி உள்ளது.விஜய் சார்பில் நாளை வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய 4 தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை.

காவல்துறை தரப்பில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கும், மற்ற இடங்களில் பேச அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.நகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே அனுமதி வழங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் 4 இடங்களிலும் அனுமதி வேண்டும் என தொடர்ந்து தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com