கோவில்பட்டியில் சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்து- போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடியில் இருந்து சரக்குப் பெட்டக லாரி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சிவகாசிக்குச் சென்று கொண்டிருந்தது.
தூத்துக்குடியில் இருந்து சரக்குப் பெட்டக லாரி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சிவகாசிக்குச் சென்று கொண்டிருந்தது. பசுவந்தனை தெற்கு செவல்பட்டியைச் சேர்ந்த அய்யாத்துரை (வயது 41) லாரியை ஓட்டிச் சென்றார். இந்த லாரி கடந்த 15ம் தேதி இரவில் கோவில்பட்டி-வேலாயுதபுரத்தை கடந்து சாத்தூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியன் தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில் லாரியின் முன்புறம் முழுவதும் சேதமடைந்தது. லாரியின் டீசல் டேங்கர் சேதமடைந்ததையடுத்து அதிலிருந்து டீசல் சாலையில் ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அங்குத்தாய் மற்றும் போலீசார் காயமடைந்த ஓட்டுநர் அய்யாத்துரையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சரக்குப் பெட்டக லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.






