அய்யனார் கோவில் நுழைவு வாயில் மீது லாரி மோதல்

திருவெண்ணெய்நல்லூரில் அய்யனார் கோவில் நுழைவு வாயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
அய்யனார் கோவில் நுழைவு வாயில் மீது லாரி மோதல்
Published on

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது40). விவசாயி. இவர் தனது டிராக்டரை கலப்பையுடன் திருவெண்ணெய்நல்லூர் அய்யனார் கோவில் முன்பு நிறுத்தினார். பின்னர் டிராக்டருக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கோவில் அருகே இருந்த ஆலமரத்தில் மோதி சென்று அங்கு நின்ற புருஷோத்தமனின் டிராக்டர் மீது மோதியது. மேலும் அந்த லாரி அய்யனார் கோவில் நுழைவு வாயில் மீது மோதி நின்றது. இதில் நுழைவு வாயில் சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரியின் அடிப்பகுதியில் டிராக்டர் சிக்கி பலத்த சேதமடைந்தது. இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com