தருமபுரி அருகே லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
தருமபுரி அருகே லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

தருமபுரி, 

தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று, மீட்பு பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com