மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் பலி
Published on

ஆதனக்கோட்டை:

ஆதனக்கோட்டை அருகே வண்ணாரப்பட்டி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். பெருங்களூர் அருகே வெள்ளவெட்டான்விடுதி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆதனக்கோட்டை பிரிவு சாலை அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி, கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆதனக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் லாரி டிரைவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com