மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் பலி
Published on

அன்னவாசல்:

விராலிமலை அருகே தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர், தனது மோட்டார் சைக்கிளில் மெய்யக்கவுண்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மணப்பாறை வெள்ளையாக்கவுண்டன் பட்டியை சேர்ந்த ரவி (60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com