லாரி டிரைவர் கைது

சாதி பெயரை சொல்லி திட்டிய லாரி டிரைவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
லாரி டிரைவர் கைது
Published on

கடலூர் மாவட்டம் தூக்கனாம்பாக்கம் இரண்டாயிரம் விளாகம் கிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்த் மகன் ராபின்சிங் (வயது 23). பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 20.8.2020 அன்று குருவிநத்தம் பாலம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், ரஞ்சித், கனகராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராபின்சிங்கை வழிமறித்து சாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் லாரி டிரைவரான ராஜேஷ், கனகராஜ் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜேஷ் (27) குருவிநத்தத்தில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜேசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கனகராஜை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com