லாரி மோதி 5 மின்கம்பங்கள் சேதம்

பாபநாசம் அருகே லா மோதி 5 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
லாரி மோதி 5 மின்கம்பங்கள் சேதம்
Published on

பாபநாசம்;

பாபநாசம் அருகே லா மோதி 5 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

லாரி மோதியது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் பல கிராமங்கள் உள்ளன. நேற்று காலை 7 மணி அளவில் பாபநாசம் ரயில் நிலையம் அருகில் பாபநாசத்தில் இருந்து அதிவேகமாக சென்ற லாரி சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் மீது மோதியது. இதில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் முறிந்து சாலையில் சாய்ந்து சேதம் அடைந்தது. சாலையில் மின்கம்பம் சாய்ந்ததால் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்கம்பம் அகற்றம்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் கருணாகரன், இளமின் பொறியாளர் ஷாஜாதி மற்றும் ஊழியர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை அகற்றினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்தது.பின்னர் மின்வாரிய ஊழியர்கள் துரித நடவடிக்கை எடுத்து மின் வினியோகம் அளித்தனர். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com