மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதலில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வின்பிரட் ரூபன் (வயது 31). தாம்பரத்தில் தங்கி பள்ளிக்கரணையில் உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை பூந்தமல்லியில் இருந்து வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் வின்பிரட் ரூபன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வின்பிரட் ரூபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com