திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து...!

திம்பம் மலைப் பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனது.
திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து...!
Published on

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு மாட்டுத்தீவனம் பாரம் ஏற்றி லாரி இன்று காலை திம்பம் மலைப்பாதை 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். சாலையோரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com