சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்...!

லாரி உரிமையாளர்கள் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்...!
Published on

சத்தியமங்கலம்:

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று சத்தியமங்கலம், திம்பம் மலைப்பகுதி, தாளவாடி பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

2000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியமான வீதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் டிரைவர்கள் வியாபாரிகள் விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் சார்பில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை பரிசோதனைச் சாவடி அருகே காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதற்காக அங்கு பிரம்மாண்ட சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என்பதால் அதற்குத் தகுந்தவாறு இருக்கைகளும் போடப்பட்டு இருந்தன. காலை 9.30 மணி முதல் காத்திருப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வரிசையாக நிறுத்தி விட்டு காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்யமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபாலன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com