

தக்கலை,
குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் தங்க முனியசாமி நேற்று முன்தினம் தக்கலை அருகே உள்ள சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட முயன்றார். உடனே, லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். இதனையடுத்து லாரியை சோதனை செய்தபோது அதில் ஜல்லி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.