லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் உயிர் தப்பினர்

லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர்கள் உயிர் தப்பினர்.
லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் உயிர் தப்பினர்
Published on

கொள்ளிடம் டோல்கேட்:

தஞ்சாவூரில் இருந்து நாமக்கல் நோக்கி நேற்று ஒரு லாரி புறப்பட்டு வந்தது. லாரியை திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி(வயது 31) ஓட்டினார். மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே கோவையில் இருந்து திருச்சி நோக்கி முசிறி பகுதியை சேர்ந்த சகாதேவன்(31) ஓட்டி வந்த மற்றொரு லாரி வந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரி டிரைவர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com