திருவள்ளூரில் அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து - 2 டிரைவர்கள் படுகாயம்

காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூரில் அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து - 2 டிரைவர்கள் படுகாயம்
Published on: 

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. அத்திப்பேடு பகுதியில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதியதால் விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விபத்திற்குள்ளான வாகனங்களுக்குள் சிக்கிய ஓட்டுநர்கள் கணபதி, நாகராஜன் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். கால்களில் பலத்த காயமடைந்த இருவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com