ஹிட்லரை விட மிகக் கொடிய குற்றவாளியாக விளங்குபவர் ட்ரம்ப் - பழ.நெடுமாறன் கண்டனம்

ட்ரம்பின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உலக நாடுகளுக்கு உண்ட என பழநெடுமாறன் கூறியுள்ளார்.
ஹிட்லரை விட மிகக் கொடிய குற்றவாளியாக விளங்குபவர் ட்ரம்ப் - பழ.நெடுமாறன் கண்டனம்
Published on

சென்னை,

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் டிரம்ப் படையெடுப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது,

மறைந்த பாசிசத் தலைவர் ஹிட்லரை விட மிகக் கொடிய குற்றவாளியாக ட்ரம்ப் உலகிற்கே பேரபாயமாகத் திகழ்கிறார்

உக்ரைன் நாட்டு அதிபரை பொதுவெளியில் அவமதித்தார்.

வெனிசுலா நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டின் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து அந்நாட்டின் அதிபரையும் துணைவியாரையும் கைது செய்து தூக்கி வந்து சிறை வைத்தார்.

இப்போது ஈரான் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தி அந்நாட்டின் தலைவர் கமேனியை படுகொலை செய்துள்ளார்.தொடர்ந்து உலகில் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்கியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உலக நாடுகளுக்கு உண்டு.

அதை உடனடியாக செய்ய முன்வருமாறு உலக நாடுகளை வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com