குரங்கணி மலையில் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க முயற்சி

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #KuranganiForestFire
குரங்கணி மலையில் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க முயற்சி
Published on

தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று 16 பேர் கொண்ட கமாண்டோக்களும் தரை பகுதியில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுவரை மீட்கப்பட்டவர்களில் மதுரையில் 5 பேர், தேனியில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா (வயது 9) மற்றும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி என 2 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com