மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி


மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி
x

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தின் மணக்குடி கிராமத்தில் 21ம் ஆண்டு சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு மவுன ஊர்வலமாக கல்லறை தோட்டம் வரை நடந்து வந்து கண்ணீர் மல்க உறவினர்களின் கல்லறையில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுனாமி அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தி இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story