டிடிவி தினகரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி


டிடிவி தினகரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
x

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறார். மேலும் அவர் தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தனது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அமித்ஷா சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அதிமுக இணைப்பு குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனை சென்றுள்ளார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

1 More update

Next Story