தைவான் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு டி.டி.வி. தினகரன் பாராட்டு


தைவான் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு டி.டி.வி. தினகரன் பாராட்டு
x

தேசத்திற்கு பெருமை தேடி தந்திருக்கும் வித்யா ராம்ராஜின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

தைவான் தடகள ஓபன் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் சீன தைபேவில் நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் தங்கப் பதக்கம் வென்ற வித்யாவுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தைவான் நாட்டில் நடைபெற்றுவரும் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரம் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது தைவான் தடகளப் போட்டியில் தங்கம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை தேடி தந்திருக்கும் வித்யா ராம்ராஜின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story