துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
Published on

சென்னை,

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இளவேனிலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக்கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன்.

அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com