இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி - பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

மோடியின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி - பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை இலக்காகவும், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதையே கொள்கையாகவும் ,நிர்ணயித்து ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் .நரேந்திர மோடியின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com