

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து அவ்விருதுகளுக்கு தேர்வாகியிருக்கும் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியிருக்கும் ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் தனுஷ் உட்பட படக்குழுவினர், மகராஜா திரைப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகையாக தேர்வாகியிருக்கும் சஞ்சனா, சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதைப் பெறும் அனல் அரசு, அமரன் திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக தேர்வாகியிருக்கும் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்காக தேர்வாகியிருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதைப் பெறும் கலைவாணன், சிறந்த ஒலிக்கலவையாக ( Best Sound Mixing ) தேர்வாகியிருக்கும் மெய்யழகன் திரைப்படக் குழுவினர், தேசிய நலனை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினர் மற்றும், தமிழ் ஆவணப்படமான ப்ளூ படத்திற்கான சிறந்த ஒலி வடிவமைப்புக்காக தேர்வாகியிருக்கும் ஹரிஹரசுதன் உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழ்நாட்டிற்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்த அனைவரின் திரைப்பயணமும் மென்மேலும் சிறக்கவும், விருதுகள் பல குவிக்கவும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.