செங்கோட்டையனை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்


செங்கோட்டையனை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 10 Sept 2025 4:15 AM IST (Updated: 10 Sept 2025 4:15 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி.தினகரனும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க கெடு விதித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வசம் இருந்த கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையே நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவர் சந்தித்தார். அப்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் இருந்துள்ளார்.

இந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் பேசப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பு அவசியம் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் இவரைப்போல டி.டி.வி.தினகரனும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செங்கோட்டையனுக்கு முன்னதாகவே டி.டி.வி.தினகரன் அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு உருவானதாகவும், ஆனால் அது தள்ளிப்போனதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் இன்று (புதன்கிழமை) அல்லது நாளை அந்த சந்திப்பு நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து சசிகலாவும் சந்திப்பார் என கூறப்படுகிறது.

1 More update

Next Story