காசநோய் விழிப்புணர்வு முகாம்

காசநோய் விழிப்புணர்வு முகாம்
காசநோய் விழிப்புணர்வு முகாம்
Published on

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு சிங்கோனா பகுதியில் பொது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் காசநோய் மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் காசநோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு தொடர் இருமல், உடல் எடை குறைவு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. சத்தான உணவுகள் எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டலாம். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கபடுகிறது. அயோடின் கலந்த உப்பு போன்றவை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று எடுத்துக்கூறப்பட்டது.

இதேபோன்று பந்தலூரிலும் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com