அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்

கயத்தாறில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்
Published on: 

கயத்தாறு:

தேசிய காசநோய் திட்டம் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய காசநோய் பிரிவு சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் கயத்தாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசா பேகம் தலைமை தாங்கினார். முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு காசநோய் கண்டறிதல் பரிசோதனை மற்றும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, எச்.ஐ.வி. ஆகிய பரிசோதனைகளும் செய்யப்பட்டது. முகாமில் கயத்தாறு வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் 160 பேருக்கு பரிசேதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் தூத்துக்குடி அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன்,

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி, சோபியா, சுகாதார பார்வையாளர் திவ்யா, நுண்கதிர் ஆய்வாளர் முத்துபிரியா, இடைநிலை சுகாதார பணியாளர் சங்கரி, பெண் சுகாதார தன்னார்வலர்கள் மஞ்சுளா, கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com