தூத்துக்குடி மாநகரமுடி திருத்தும் அழகு கலை தொழிலாளர் சங்க கூட்டம்

தூத்துக்குடி மாநகர முடிதிருத்தும் அழகு கலை தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாநகரமுடி திருத்தும் அழகு கலை தொழிலாளர் சங்க கூட்டம்
Published on

தூத்துக்குடி மாநகர முடிதிருத்தும் அழகு கலை தொழிலாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் தபால் தந்தி காலனி 1-வது தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் எம்.இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.எஸ்.விஜயகுமார், பொருளாளர் எம்.பி.பாண்டியன், அமைப்பாளர் ஜி.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர் சரவணக்குமார் மகன் அரிகரன், ராஜபாண்டி மகன் விஜய்நந்தா ராம் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கினர். கூட்டத்தில் புதிய துணைத்தலைவராக எம்.ராஜ், துணை செயலாளராக என்.நல்லதம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் மாநகர தலைவர் கே.முருகன், செயலாளர் ஜி.ராஜ்குமார், பொருளாளர் ஆர்.சின்னத்துரை, அமைப்பாளர் டி.ஞானராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர ஆலோசகர் ஜி.முருகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com