தூத்துக்குடி கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா

தூத்துக்குடி கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடந்தது.
தூத்துக்குடி கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா
Published on

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெசி பெர்னாண்டோ தலைமை தாங்கி, பேரவை மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கல்லூரி செயலாளர் சி.சிபானா, துணை முதல்வர் குழந்தை தெரஸ் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புனித சவேரியார் கல்லூரி முதல்வர் மரிய தாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தலைவர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் பிற மாணவர்களை கல்வி மற்றும் கலை ஆர்வத்தில் ஊக்குவிப்பவர்களாக இருக்க வேண்டும். சக மாணவர்களின் பொருளாதார தேவை, கல்வி தேவை மற்றும் தோழமை உணர்வுடன் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவ வேண்டும். நேர்மறையான உணர்வுகளை கொடுப்பதன் மூலம் நன்மைகள் பல இந்த சமூகத்தில் உருவாக வேண்டும் ஆகிய கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

விழாவில் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், நிலைக்காட்சிகள் நடந்தன. விழாவில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். மாணவியர் பேரவை தலைவி ஜே.அட்லின் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com