தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை

தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தூத்துக்குடி,

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழக கடலேர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல்பகுதியில் 60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என்பதால் விசை மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து, மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது..

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com