தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படும் என அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. #Sterlite #SterliteProtest
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படும் என அறிவிப்பு
Published on

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவுகள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது.

இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com