டி.வி. மெக்கானிக்கிற்கு அரிவாள் வெட்டு

ஆலங்குளம் அருகே டி.வி. மெக்கானிக்கிற்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
டி.வி. மெக்கானிக்கிற்கு அரிவாள் வெட்டு
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே நல்லூர் காசியாபுரத்தை சேர்ந்தவர் ஜாண் கென்னடி. இவர் அந்த பகுதியில் டி.வி. பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று இரவு ஆலங்குளத்தில் இருந்து நல்லூருக்கு காட்டுப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்து கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்துபோன மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் ஜாண் கென்னடியை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com