

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான நிர்வாகக் கண்காணிப்பு மற்றும் செயற்பாட்டு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;
* இது சாதாரண கூட்டம் அல்ல - இது ஒரு நிர்வாகத் தேர்வு
* கூட்டம் நடப்பது வெற்றிக்கான காரணமல்ல கண்காணிப்பு நடப்பதுதான் வெற்றி
*நோக்கம்: செயல்படாத நிர்வாகிகளைச் செயல்பட வைப்பது & கள நிலவரத்தை ஆராய்வது.
* இது அரசியல் மேடை அல்ல. இது நிர்வாக ஆய்வு மையம்.
அரங்கம் அமைக்கும் முறை
ஒன்றிய செயலாளர்களுக்கு தனித்தனி மேஜை (Table) அமைக்கவும்.
ஒவ்வொரு மேஜைக்கும் எதிரே 20 இருக்கைகள் போடவும்.
அந்தந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள் அந்தந்த மேஜையில் மட்டுமே அமர வேண்டும்.
கீழ்கண்டவற்றை வாய்மொழியாக அல்ல, அறிக்கையாகப் பெற வேண்டும்:
1. தொகுதியின் சாதக / பாதக அம்சங்கள்.
2. நிலவும் உள்ளுர் அரசியல் சூழல்.
3. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள்.
4. உறுப்பினர் சேர்க்கை அனுபவங்கள்.
நாம் கட்டமைப்பைக் கட்டினால், வெற்றி நம்மைத் தேடி வரும். ஒவ்வொரு ஒன்றியமும், கிளையையும் உயிர்ப்பிப்போம். தயாராவோம்! வெல்வோம்! இப்படிக்கு, தலைமை நிலையச் செயலகம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.