த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழா: நலத்திட்ட உதவிகளை செய்ய ஆனந்த் வலியுறுத்தல்

வெற்றி தலைவருக்கு வாகை மாலையை அணிவிப்போம்! என த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்து கொண்டார்.
த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழா:  நலத்திட்ட உதவிகளை செய்ய ஆனந்த் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கழக தோழர்களுக்கு வணக்கம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மை சக்தியாக திகழும் தமிழக வெற்றிக்கழகம், நாளை மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுகிறது. மக்களுக்கான உண்மையான தலைவர் நம் வெற்றி தலைவர்தான் என்பதை இந்த நாடறியும்.

Also Read
தூய்மை பணியாளர்கள் விவகாரம்: ஜனநாயக உரிமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! ஆதவ் அர்ஜுனா எக்ஸ் பதிவு
த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழா:  நலத்திட்ட உதவிகளை செய்ய ஆனந்த் வலியுறுத்தல்

3-ம் ஆண்டு தொடக்க விழாவை நாம் கொண்டாடும் இந்த இனிமையான தருணத்தில், நம் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இதற்கான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கழக தலைவரின் ஒப்புதலோடு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுக்காக உழைப்போம். மனசாட்சியுள்ள மக்களாட்சியை வெற்றி தலைவர் தலைமையில் அமைக்க பாடுபடுவோம்! வெற்றி தலைவருக்கு வாகை மாலையை அணிவிப்போம்! என தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com