வெற்றியை நோக்கி தவெக வேட்பாளர்கள்..மாமல்லபுரம் ‘ரிசார்ட்'டில் பாதுகாக்க திட்டம்

தவெக வேட்​பாளர்​களை குதிரை பேரத்​தின் அடிப்​படை​யில் இழுக்க திமுக, அதி​முக முயற்சி செய்​ய​லாம் என விஜய்க்கு தகவல் கிடைத்​த​தாக கூறப்படு​கிறது.
வெற்றியை நோக்கி தவெக வேட்பாளர்கள்..மாமல்லபுரம் ‘ரிசார்ட்'டில் பாதுகாக்க திட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கான வாக்கு எண்​ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்​தலில் 233 தொகு​தி​களில் விஜய்​யின் தவெக தனித்​துப் போட்​டி​யிடு​கிறது. எடப்​பாடி தொகு​தி​யில் மட்​டும் சுயேச்சை வேட்​பாள​ருக்கு ஆதரவு அளித்​துள்​ளது.

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 10 மணி நிலவரப்படி தவெக 103 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தவெக சென்று கொண்டிருக்கிறது.

இதனிடையே, சில தொகு​தி​களில் வெற்றி பெறும் தவெக வேட்​பாளர்​களை குதிரை பேரத்​தின் அடிப்​படை​யில் இழுக்க திமுக, அதி​முக முயற்சி செய்​ய​லாம் என விஜய்க்கு தகவல் கிடைத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, 2 நாட்​களுக்கு முன்பு கட்​சி​யின் வேட்​பாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​திய விஜய், ‘வெற்றி பெற்​றதும் வேறு எங்​கும் செல்​லாமல் எந்​நேர​மாக இருந்​தா​லும் பனையூருக்கு வந்​து​வுிட வேண்​டும். உங்​களுக்​காக நான் காத்​திருப்​பேன்’ என அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி​யில் உள்ள ஒரு தனி​யார் விடு​தியை தவெக​வினர் தயார் செய்து வைத்​துள்ள தகவல் கசிந்​துள்​ளது. வெற்றி பெறும் வேட்​பாளர்​களை அங்கு தங்க வைக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதன்​படி, வெற்றி பெற்ற எம்​எல்​ஏ-க்​களை பாது​காப்​பாக வைக்க பூஞ்​சேரி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் 100 பேர் தங்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. வேட்​பாளர்​களை சிதறாமல் அந்த இடத்​துக்கு அழைத்து வரும் முக்​கிய பொறுப்பை ஆதவ் அர்​ஜு​னா​விடம் விஜய் ஒப்​படைத்​துள்​ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com