பீர் பாட்டிலில் தவெக வேட்பாளர் படம்: தேனியில் பரபரப்பு

பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் சபரி ஐங்கரன் போட்டியிடுகிறார்.
பீர் பாட்டிலில் தவெக வேட்பாளர் படம்: தேனியில் பரபரப்பு
Published on

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்ட மன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சபரி ஐங்கரன் போட் டியிடுகிறார். இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், பீர் பாட்டிலில் த.வெ.க. வேட்பாளர் சபரி ஐங்கரன் மற்றும் கட்சி தலைவர் விஜய்யின் புகைப்படத்துடன், 'விசில்' சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, த.வெ.க. நகர செயலாளர் தினேஷ் தலைமையில் அக்கட்சியினர் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். கட்சியின் தலைவர் மற்றும் வேட்பாளரின் புகைப்படங்களை பீர் பாட்டிலில் ஒட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி யுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com